Disclaimer: The material in this print-out relates to the law as it applies in the state of Victoria. It is intended as a general guide only. Readers should not act on the basis of any material in this print-out without getting legal advice about their own particular situations. Victoria Legal Aid disclaims any liability howsoever caused to any person in respect of any action taken in reliance on the contents of the publication.

We help Victorians with their legal problems and represent those who need it most. Find legal answers, chat with us online, or call us. You can speak to us in English or ask for an interpreter. You can also find more legal information at www.legalaid.vic.gov.au

Tamil/தமிழ்

Tamil/தமிழ் – சட்டப் பிரச்சினைகளில் எம்மால் எவ்வாறு உதவ இயலும்.

சட்டப் பிரச்சினைகளில் எம்மால் எவ்வாறு உதவ இயலும்

இந்தத் தகவல்கள் Wurundjeri நிலப்பரப்பில் ஆக்கம் செய்யப்பட்டன.

ஜனவரி 2022-இல் இருந்தவாறு இந்தத் தகவல்கள் துல்லியமானவை.

சட்டப் பிரச்சினைகளால் நீங்கள் மன-அழுத்தம், படபடப்பு, சோகம் மற்றும் கோபம் ஆகிய உணர்வுகளுக்கு ஆளாகக்கூடும். எம்முடன் நீங்கள் தொடர்புகொள்ளும் பொழுது நீங்கள் இப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டிருக்கக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். சட்டப் பிரச்சினைகளில் எம்மால் உங்களுக்கு உதவ இயலும்.

உங்களுடைய சட்டப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் எமக்கு எவ்வாறு தெரிவிப்பது

உங்களுடைய சட்டப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் எமக்குத் தெரிவிப்பதற்கான வழிகள் மூன்று உள்ளன: நீங்கள்:

  • Legal Help எனும் சட்ட உதவி சேவையினை 1300 792 387 எனும் இலக்கத்தில் நீங்கள் அழைக்கலாம்
  • எமது ‘வலை-உரையாடல்’ (webchat)-ஐப் பயன்படுத்தி நீங்கள் எமக்கு எழுத்து மூலமாகத் தெரிவிக்கலாம்
  • எமது அலுவலகங்களில் ஒன்றிற்கு நீங்கள் செல்லலாம்.

இதற்கு ஆயத்தமாவதற்காக, உங்களுடைய சட்டப் பிரச்சினையைப் பற்றிய ஆவணங்கள் எதுவும் இருப்பின் அவற்றைத் தயார் செய்யுங்கள். ஒரு நீதிமன்றம் அல்லது சட்டதரணி ஒருவர் அல்லது காவல்துறையினரிடமிருந்து வந்த ஒரு அபராதம், கடிதம், அல்லது மின்னஞ்சலாக இந்த ஆவணங்கள் இருக்கலாம்.

1. Legal Help சேவையைத் தொலைபேசி மூலம் அழையுங்கள்

1300 792 387 எனும் இலக்கத்தில் நீங்கள் Legal Help சேவையை அழைக்கலாம்.

Legal Help சேவையானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். பொது விடுமுறை நாட்களில் இந்த சேவை அடைப்பில் இருக்கும்.

தொலைபேசி அழைப்பிற்கு ஆகும் செலவு ஒரு உள்ளூர் அழைப்பிற்கு ஆகும் செலவைப் போன்றதாக இருக்கும்.

Legal Help சேவையினை அனைவரும் தாராளமாக அழைக்கலாம்.

Legal Help சேவையினை நீங்கள் அழைத்தால், நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கக்கூடும். உங்களால் முடிந்தால், காலை வேளையில் முன்னதாகவே அழையுங்கள்.

எமது ‘வலை-உரையாடல்’ (webchat)-ஐப் பயன்படுத்துவது இன்னும் துரிதமானதாக இருக்கலாம்.

என்னுடைய மொழியில் என்னால் பேச இயலுமா?

எமது பணியாளர்கள் பல மொழிகளில் பேசுபவர்களாவர். உங்கள் மொழியைப் பேசுபவர் எம்மிடம் இல்லை என்றால், நீங்கள் எம்மைத் தொலைபேசியில் அழைக்கும் பொழுது மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

உங்களுடைய மொழியைப் பேசுபவர்கள் எம்மிடம் இருக்கிறார்களா (speak your language) என்று தெரிந்துகொள்ளுங்கள்.

எனக்காக இன்னொருவர் தொலைபேசி அழைப்பைச் செய்யலாமா?

ஆம். உங்களுடைய நம்பிக்கைக்குரிய சேவகர் அல்லது ஆதரவுதவி நபர் ஒருவர் எம்மைத் தொலைபேசி மூலம் அழைக்கலாம். அவர் எம்மை அழைக்கும் பொழுது நீங்கள் அந்த சேவகர் அல்லது ஆதரவுதவி நபருடன் இருப்பது மிகவும் நல்லது. தொலைபேசி மூலம் அழைக்கும் பொழுது, தொலைபேசி ‘மெனு’-வில் சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை அவர் பின்பற்றவேண்டும்.

‘நேஷனல் ரிலே சேவை’-யை என்னால் பயன்படுத்த இயலுமா?

ஆம். இதற்கான வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் உள்ளன:

  • ‘டீ.டீ.ஒய்’ (TTY): முதலில் 133 677-அழைத்து, பிறகு 1300 792 387-ஐ அழையுங்கள்
  • பேச மற்றும் கேட்க’ (Speak and Listen): முதலில் 1300 555 727-ஐ அழைத்து, பிறகு 1300 792 387-ஐ அழையுங்கள்
  • ‘இண்ட்டர்-நெட் ரிலே’: nrschat.nrscall.gov.au எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள், பிறகு 1300 792 387-ஐ அழையுங்கள்
  • ‘எஸ்-எம்-எஸ் ரிலே’ (SMS Relay): 0423 677 767 -இற்குக் குறுஞ்செய்தி அனுப்புங்கள்
  • ‘விடியோ ரிலே’ (Video Relay): ‘ஸ்கைப்’ அல்லது ‘நேஷனல் ரிலே சர்வீஸ்’ செயலியைப் பயன்படுத்துங்கள்.

‘நேஷனல் ரிலே சர்வீஸ்’ -ஐப் பயன்படுத்துவதற்கு முன்பாக, அதற்காக நீங்கள் பதிவு செய்யவேண்டும்.

2. ‘இணைய-உரையாடல்’ (webchat) மூலம் எமக்கு எழுத்து மூலமாக அறிவியுங்கள் (ஆங்கிலத்தில் மட்டும்)

உங்களுடைய சட்டப் பிரச்சினையைப் பற்றி எமக்குத் தெரிவிக்க Legal Help Chat என்று அழைக்கப்படும் எமது ‘இணைய-உரையாடல்’ (webchat)-ஐப் பயன்படுத்துங்கள். எமது பணியாளர்கள் உங்களுக்குப் பதிலளிப்பர். உங்களுக்கு இன்னும் அதிக உதவி தேவைப்பட்டால், ‘சட்ட உதவி’ (Legal Help) எனும் சேவையைத் தொலைபேசி மூலம் அழைக்குமாறு அவர்கள் உங்களுக்குச் சொல்லக்கூடும்.

3. எம்மை நேரில் வந்து பாருங்கள்

எமது அலுவலகங்களுக்கு நீங்கள் நேரில் வரலாம். மெல்பர்ன் நகரிலும், விக்டோரிய மாநிலத்தின் பிராந்தியப் பகுதிகளிலும் எமது அலுவலகங்கள் உள்ளன. ‘எமது அலுவலகங்கள் எங்கு உள்ளன’ (where we have offices) என்று பாருங்கள்.

சட்டதரணி ஒருவருடன் பேசுவதற்காக உங்களுக்கு சந்திப்புவேளை ஒன்று தேவைப்படும்.

எமது அலுவலகங்களில் சரிவுப்-பாதைகள் (ramps) அல்லது மின்-தூக்கிகள் (lifts) உள்ளன, அத்துடன் இங்கு நீங்கள் உங்களுடைய செல்லப்-பிராணிகளுடன் வரலாம்.

நீங்கள் எம்முடன் தொடர்புகொள்ளும் பொழுது என்ன நடக்கும்

உங்களை நாங்கள் சில கேள்விகள் கேட்போம். எப்படிப்பட்ட உதவியை உங்களுக்கு எம்மால் அளிக்க இயலும் என்று முடிவு செய்ய இது எமக்கு உதவும்.

நீங்கள் எமக்குச் சொல்லும் அனைத்து விடயங்களும் இரகசியமாக வைக்கப்படும். நீங்கள் சொன்ன விடயங்களை நாங்கள் மற்றவர்களுக்குச் சொல்லலாம் என்று நீங்கள் சொன்னாலொழிய நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம்.

பல சட்டப் பிரச்சினைகளில் எம்மால் உதவ இயலும். உங்களுடைய கேள்விகளுக்கு எம்மால் பதிலளிக்க இயவில்லை என்றால், பதிலளிக்கக் கூடிய யாராவதொருவருடைய தொடர்பு விபரங்களை உங்களுக்குக் கொடுப்போம். இது ஒரு சமூக சட்ட உதவி மையமாகவோ, தனிப்பட்ட சட்டதரணி ஒருவராகவோ இருக்கலாம்.

எம்மால் எவ்வாறு உதவ இயலும்

சட்டம் சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் அறிவுரை

சட்டத்தைப் பற்றியும், உங்களுக்குள்ள தெரிவுகளைப் பற்றியும் எம்மால் உங்களுக்குச் சொல்ல இயலும்.

பின் வருவருவனவற்றையும் எம்மால் செய்ய இயலுமாகலாம்:

  • உங்களுக்குத் தகவல்கள் அனுப்ப
  • நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பாக உங்களுடன் பேச
  • மற்ற சேவைகள் மற்றும் ஆதரவுதவிகளுடன் உங்களைத் தொடர்புபடுத்த
  • கடிதங்கள் எழுத
  • உங்களுக்காக நீதிமன்றத்தில் பேச.

இது பின் வருவனவற்றைப் பொறுத்து அமையும்:

  • உங்களுடைய சட்டப் பிரச்சினை என்ன என்பதைப் பொறுத்து
  • உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பொறுத்து

பின் வரும் தருணங்களில் எம்மால் உங்களுக்குக் கூடுதல் உதவி அளிக்க இயலுமாகலாம்:

  • ஆங்கிலத்தில் பேசுவதில் உங்களுக்கு சிரமங்கள் இருந்தால்
  • இயலாமை அல்லது மன-நலப் பிரச்சினை ஒன்று உங்களுக்கு இருந்தால்
  • நீங்கள் ‘ஆபொரிஜினிப்’ பூர்வகுடியாகவோ, ‘டோரிஸ் நீரிணைத் தீவகத்தவ’ராகவோ இருந்தால்.

நீங்கள் எம்முடன் தொடர்புகொள்ள, மொழிபெயர்த்துரைப்பாளர்கள் அல்லது ‘நேஷனல் ரிலே சர்வீஸ்’ போன்ற உதவிகளை எம்மால் ஒழுங்கு செய்ய இயலும்.

உங்களுக்கு உதவிகரமாக இருக்கும் வகைகளில் எம்மால் உங்களுடன் தொடர்பாடல் கொள்ள இயலும்.

தகவல்களை நாங்கள் உங்களுக்கு எப்படிக் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை எமக்குச் சொல்லுங்கள்.

Duty lawyers

‘Duty lawyers’ என்று அழைக்கப்படும் எமது பணியில் இருக்கும் சட்டதரணிகள்] விக்டோரியா மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றுகிறார்கள். சில சட்டப் பிரச்சினைகளில் அவர்கள் உதவுவார்கள். உங்களுக்கு ஏற்கனவே வக்கீல் ஒருவர் இல்லை என்றால், நீங்கள் நீதிமன்றதிற்குச் செல்லவேண்டிய தினத்தில் அவர்களால் உங்களுக்கு உதவ இயலுமாகலாம். நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும் நாளன்று உங்களுக்கு சட்டதரணி ஒருவர் இல்லை என்றால், duty lawyer ஒருவருடன் நீங்கள் பேசலாமா என்று நீதிமன்றத்தில் விசாரியுங்கள். உங்களுக்கு உதவ இயலக்கூடிய மற்ற சேவைகளைப் பற்றியும் நீங்கள் விசாரிக்கலாம்.

நீங்கள் சட்டத்தை மீறியிருக்கிறீர்கள் என்று காவல்துறையினர் சொன்னதன் காரணமாக ‘மெஜிஸ்ட்ரேட் கோர்ட்’ (Magistrates’ Court) எனப்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு நீங்கள் சென்றால், நீதிமன்றத்தில் நீங்கள் சமூகமாவதற்கு முன்பாக பணியில் இருக்கும் ‘duty lawyer’-உடன் உங்களால் பேச இயலுமாகலாம். Help Before Court service (‘நீதிமன்றத்தில் தோன்றுவதற்கு முன்பு கிடைக்கும் உதவி சேவை’)-யைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

‘ஃபேமிலி லா கோர்ட்ஸ்’ (Family Law Courts) எனப்படும் குடும்ப நீதிமன்றத்திற்கு நீங்கள் சென்றால், நீதிமன்றத்தில் நீங்கள் சமூகமாவதற்கு முன்பாக, எமது Family Advocacy and Support Services (‘குடும்ப விவகாரங்கள் மற்றும் பரிந்துரை சேவை’)-யுடன் உங்களால் பேச இயலுமாகலாம்.

மற்ற ஆதரவுதவிகள்

உங்களுடைய சட்டப் பிரச்சினைக்காக மற்ற ஆதரவுதவியை எம்மால் அளிக்க இயலும்.

மன-நலத்திற்கான கட்டாய சிகிச்சை ஒன்றை நீங்கள் மேற்கொண்டுவருகிறீர்கள் என்றால், Independent Mental Health Advocacy (‘சுயாதீன மன-நலப் பரிந்துரை’) எனும் சேவையினால் உங்களுக்கு உதவ இயலும்.

‘குழந்தைப் பாதுகாப்பு’ முறைமையின் ஆரம்ப நிலைகளில் பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு எமது Family and Advocacy Support (‘குடும்ப விவகாரங்கள் மற்றும் பரிந்துரை ஆதரவுதவி’)-யினால் உதவ இயலும்.

நீங்களும் உங்களுடைய வாழ்க்கைத்துணைவரும் பிரிவுறுகிறீர்கள் என்றால், உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள எமது Family Dispute Resolution Service (‘குடும்ப விவகார சச்சரவுத் தீர்வு சேவை’)-யினால் உங்களுக்கு உதவ இயலும். உதாரணமாக, குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது என்பதைப் பற்றிய உடன்பாடுகள்.

உங்களுடைய சட்டப் பிரச்சினையைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

பல வகைப்பட்ட சட்டப் பிரச்சினைகளைப் பற்றிய தகவல்கள் எமது website (‘வலைத்தல’)த்தில் உள்ளன.

இந்த வலைத்தலத்திற்குள் நீங்கள் சென்று தகவல்களைப் பெரிதாக்கிப் பார்க்கலாம், அல்லது ‘ஸ்க்ரீன் ரீடர்’ எனும் திரை வாசிப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல்களைச் செவிமடுத்துக் கேட்கலாம்.

‘ஈசி ரீட்’ எனும் வாசிப்பதற்கு எளிதான, அல்லது என் மொழியிலுள்ள தகவல்கள் உங்களிடம் உள்ளனவா?

‘ஈசி ரீட்’ எனும் வாசிப்பதற்கு எளிதான, மற்றும் சில சட்டப் பிரச்சினைகளைப் பற்றி வெவ்வேறு மொழிகளில் உள்ள இலவசக் குறுநூல்கள் எம்மிடம் உள்ளன.

எமது catalogue page எனும் ‘அட்டவணைப்-பட்டியல் பக்க’த்தில் எமது குறுநூல்களை நீங்கள் காணலாம்.

எமது வெளியீடுகளை வாசிக்க ‘ஸ்க்ரீன் ரீடர்’ எனும் திரை வாசிப்புத் தொழில் நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஏற்புக்கூற்று

எமது Shared Experience and Support மற்றும் Speaking from Experience ஆகிய குழுக்கள் இந்தப் பக்கத்தினை எழுத்தாக்கம் செய்ய உதவின.

Updated

Legal Help Chat